Categories
சினிமா தமிழ் சினிமா

“பிங்க் நிற சேலையில் ஜொலிக்கும் குந்தவை”…. ட்ரெண்டிங்கில் த்ரிஷா…!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலரின் கவனத்தையும் திரிஷா பெற்றுள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டப்படி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல், ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் என பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். இதில் பலரின் கவனத்தையும் த்ரிஷாதான் பெற்றார். நிகழ்ச்சியில் திரிஷா சேலையில் ஜொலித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட த்ரிஷாவின் கியூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |