Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு- 2’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Vijay Sethupathi's next with director Mysskin - Vijay Sethupathy- Mysskin- Pisasu  2- Master- Mumbaikar | Thandoratimes.com |

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் மிஸ்கின் பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் பிசாசு 2 படத்தில் நடிகர் விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிசாசு 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |