பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகளை நீக்கியது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சென்ற 2014 ஆம் வருடம் வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மையில் இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இது குறித்து மிஸ்கின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நிர்வாண போட்டோஷூட் எடுத்தது உண்மைதான். அதை எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பர் போட்டோகிராபர் சுந்தர் என்பவரை வைத்து எடுத்தோம். ஆனால் இத்திரைப்படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டும். இந்த காட்சியை வைத்தால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள். அதனால் படத்தில் இந்த காட்சியை வைக்க வேண்டாம் என முடிவெடுத்தோம். அந்த போட்டோக்களை நான் பார்க்க கூட இல்லை. அதையெல்லாம் நீக்கும்படி போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார்.