இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீராட் கோலி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 61வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமான ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலி ஓட்டல் தொழில்களில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா மும்பை புறநகர் பகுதி என ஜீஹுவில் உள்ளது. இது குறித்து கிஷோர் குமாரின் மகன் சுமித் குமார் சந்தித்த விராட் கோலி ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த பங்களாவில் ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடம் கோலிக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளது. அவைகள் அகற்றப்பட மாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் 4 ஆண்களுக்கு முன் ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்ட போது மாநகராட்சி சார்பில் சட்டவிராத கட்டுமானத்துக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது புதிய உணவகம் அனைத்து விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.