எழும்பூரில் இருக்கும் காவல் அருங்காட்சியத்தை நடிகர் பார்த்திபன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுமக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியம். காவல்துறை நம் நண்பன், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரத்திற்கு காவல்துறையினர் உதவியாக உள்ளனர். காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாலையில் செல்லும் போது மது அருந்துவது, விதிகளை மீறி சென்ற பின்பும் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருக்க வேண்டும்.
சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் 10 குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுப்பது இப்போதும் இருக்கின்றது. பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு பின்னால் இருக்கும் நபர் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படி என்பதை கேட்கும்போது சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் உள்ள வெங்காயம், சுவையானது அந்த அளவுக்கு என்னுடைய கேரக்டர், படத்துக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.