பிச்சை எடுக்கும் பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளனர்
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நபிஷா. தற்போது 57 வயதாகும் இவர் தனது 27வது வயதில் கணவரை பிரிந்தார். அதன்பிறகு பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கினார். 30 வருடங்களாக பிச்சை எடுத்து வரும் இவரது நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல ஆச்சரியப்படும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது.
கணவரால் கைவிடப்பட்ட நபிஷா 30 வருடங்களாக தொடர்ந்து பிச்சை எடுத்து அந்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்துள்ளார். இதனால் தற்போது அவரது வங்கி கணக்கில் 1.5 கோடி ரூபாய் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 5 மாடி வீடு சொந்தமாக வைத்திருக்கும் நபிஷா அதனை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார். ஆனாலும் இன்னும் தான் பிச்சை எடுப்பதை அவர் விடவில்லை.
பத்து வருடங்களாக வீல் சேரில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். ஆனால் அவர் நடக்கும் நிலையில் தான் உள்ளார். இதுபற்றி காவல்துறையினர் விசாரித்தபோது ஒருமுறை காலில் அடிபட்டதால் வீல் சேர் பயன்படுத்தியதாகவும் அந்த சமயத்தில் அதிக வருமானம் கிடைத்ததால் இதனையே தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.