Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுத்து வந்த முதியவரின் வங்கிக்கணக்கில்… ரூ 20 லட்சம் பணம்… போலீசார் அதிர்ச்சி…!!!

மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது.

அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த ராதா என்பதும், இவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அவரது வங்கி கணக்கில் கடந்த ஆண்டு வங்கியில் ஒரே தவணையாக ரூபாய் 36 லட்சம் எடுத்துள்ளதும், தற்போது நீதம் 20 லட்சம் வங்கியில் இருப்பதும் தெரியவந்தது.

Categories

Tech |