Categories
மாநில செய்திகள்

பிஜேபிக்கு அமைச்சர் எச்சரிக்கை…வேல் யாத்திரை வேண்டாம்…. மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும்….!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டுமென்றும், மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

புரசைவாக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,கொரோனா பரவல் காரணமாக வேல் யாத்திரை வேண்டாம் என்றும் அதனை கைவிடுவது தான் அனைத்து கட்சிக்கும் நல்லது என்றும்  தெரிவித்தார். மீறி  வேல் யாத்திரை நடத்தினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சட்டத்துக்கு கட்டுப்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றும் கண்டிப்பாக அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார். இது பாஜகவிற்கு மட்டும் அல்ல அனைத்து கட்சியினருக்கும் இதே நடைமுறை தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் 7 பேர் விடுதலை குறித்தகேள்விக்கு, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கவனத்தில் கொண்டு ஆளுநர் முடிவு எடுப்பார் என்று பதிலளித்தார். ஆன்லைன் விளையாட்டு தடை குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |