Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபியை புரிந்துகொள்வதற்கு ஒரு சாம்பிள் இதான் – திருமா சொன்ன பரபரப்பு விஷயம் …!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், திரிபுராவில் திட்டமிட்டு இந்துக்களா, இஸ்லாமியர்களா என்று அரசியலை மடைமாற்றம் செய்து, மதவெறி அரசியலின் மூலம் அன்றைக்கு அவர்கள் அங்கு ஆட்சி புரிந்த நாளிலிருந்து வன்முறை, வன்முறை, வன்முறை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிஜேபியை புரிந்துகொள்வதற்கு இதைவிட ஒரு சாம்பிள் தேவையில்லை.

பிஜேபி சங்பரிவார் கும்பல் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள், அதிகாரத்திற்கு வருவதற்கு என்ன செய்வார்கள், இன்றைக்கு மேற்குவங்கத்தின் நிலைமையும் அதுதான். ஜோதிபாசு  அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேறிய பிறகு, அந்த மாநிலத்தின் நிலை மதம் சார்ந்த ஒரு அரசியலை நோக்கி நகர்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தவரை கருத்தியல் சார்ந்த விவாதங்கள் தான் அங்கு நடக்கும். கருத்தியல் சார்ந்த இரு அணிகள் தான் அங்கே மோதக் கூடிய நிலை. முற்போக்கு சிந்தனையாளர்களா ?  பழமைவாத சிந்தனையாளர்களா என்கிற அடிப்படையில் தான் அங்கே தேர்தல் களமும் இருக்கும்.

பாட்டாளி வர்க்கமா ? முதலாளித்துவ வர்க்கவர்க்கமா ? என்ற அடிப்படையில்தான் தேர்தல் களமே போட்டியை சந்திக்கும். ஆனால் இன்று மம்தா பானர்ஜிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான அரசியல் என்பது மதவழி அடிப்படையிலான அரசியலாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் நெருக்கடிகளை சந்திக்க கூடிய ஒரு நிலையை மம்தா பானர்ஜி அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. தற்போது திரிபுராவில் ஏன் இந்த நிலைமை?

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடத்தப்பட்ட ஒரு பேரணியை திடீரென வன்முறை வெடித்ததற்கு பதிலுக்கு பதில், பழிக்குப் பழி அடிப்படையில் மட்டும் இல்லை தோழர்களே…… நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காகவும் தான். அவர்கள் ஒரு தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் என்றால் உடனே அவர்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கின்ற யுக்திக்கு தாவுவார்கள். எப்படி வாக்குகளை ஒருங்கிணைப்பது இந்துக்களா ? இந்துக்கள் அல்லாதவர்களா ? அதற்கு வன்முறையை தூண்ட வேண்டும். அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எண்ணற்ற பல வன்முறைகள் என விமர்சித்தார்.

Categories

Tech |