தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, நமக்கெல்லாம் கதாநாயகனாக இருக்கக்கூடிய… என்னுடைய அன்பு சகோதரர்…. இன்று பல பேருக்கு செம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய…. பிஜேபியின் சிங்கமாக திகழக்கூடிய…. என்னுடைய அன்பு சகோதரர்…. எனக்கு முன்னால் பேசும்போது தம்பி சொன்னார்கள்…. அவர் முதலமைச்சர் என்று….. அதெல்லாம் பிஜேபில சொல்லவே கூடாது.
அவர்தான் முதலமைச்சர்னு நமக்கு தெரியும். மனசோட வச்சிக்கிடணும். ஏன்னா அவர் கோபப்படுவாரே…. ஏன்டா என்னை ஏத்தி விடுறீங்க, அப்படி அல்ல… அன்புச் சகோதரர் அண்ணாமலை அவர்கள் தனிப்பட்ட முறையில் நான் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம கட்சியில ஒரு பெரிய தொல்லை இருக்குப்பா. பாரத் மாதா கி ஜே னா மூணு வாட்டி சொல்லுவாங்களா.. அதுக்குள்ள பேச்சே மறந்து போயிடுது.
எனக்கு சகோதரர் அண்ணாமலையிடம் பிடித்தது என்னவென்றால்… நான் எப்படி இருந்தேனோ அப்பேர்ப்பட்ட தலைவர் எனக்கு. கலைஞரிடம் இருந்து கற்றுக் கொண்டது நான். எல்லோருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் சொல்லக்கூடியவன் எங்க யூனியனில்…. அது போன்று இவ்வளவு பெரிய இயக்கத்தில் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார் அண்ணாமலை என்றால் அவர் தான் உண்மையான தலைவன் என புகழ்ந்து தள்ளினார்.
அண்ணாமலையால் பிஜேபிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கு. வந்துடுச்சு கூட்டம் அதெல்லாம் கரெக்டு. ஆனால் நான் அண்ணாமலையிடம் சொன்னேன், சகோதரா உன் பேச்சாலே இந்த செய்தியாளர்களை திருப்பின ஒரே ஆள் நீ தான்யா….
நான் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக சொல்லக்கூடாது. அவர்கள் மிகவும் நல்லவர்கள், பேசக்கூடாது, போடக்கூடாது என்ற செய்தியை சரியாக பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள், இப்போது இருக்க முடியவில்லை. ஏனென்றால் இங்கே வந்தாலே மூச்சு திணறுகிறதே…. அப்போ எழுதி தான ஆக வேண்டும். இல்லை என்றால் சகோதரர் அண்ணாமலையின் பேச்செல்லாம் எவ்வளவு பேசிய நல்ல பேச்செல்லாம் காணாமல் போயுள்ளது.
இப்போது வெறும் மூச்சு விட்டார் மட்டும் போடுகிறார்கள் செய்தியில்…. இந்த உண்ணாவிரதம் உண்மையிலலே சொல்கிறேன்…. எல்லோரும் சொல்வார்கள் பிஜேபி என்றால் கூட்டம் வராது, ஏனென்றால் காசு கொடுத்து கூப்பிடுகின்ற கூட்டம் பிஜேபி அல்ல என தெரிவித்தார்.