மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அவர், நேற்று தனது ட்விட்டர் பதிவில் நாட்டில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாகவும், பணவீக்கம் விண்ணை எட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தியா சிறந்தது என்றும் ஆனால் மத்திய பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.