செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் இந்த ஆறு மாதத்தில் மூன்று வேலை தான் ஒழுங்கா நடக்கிறது, ஒன்று தடுப்பூசி காரணம் என்ன 100% இலவசமாக மத்திய அரசு கொடுத்து மானிட்டர் பண்ணுது, இரண்டாவது ரேஷன் கடையில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நபருக்கும் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி,
ஒரு கிலோ பருப்பு, மூன்றாவது விவசாயிகளுக்கு பத்தாவது தடவையாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போய் சேர்கிறது. இதை தவிர வேறு என்ன நடந்து இருக்கு தமிழ்நாட்டில் இந்த ஆறு மாதத்தில்..கோணி சாக்கை தோளில் போட்டுக்கொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனாங்க இந்த திரவிடியன் ஸ்டாக் ஸ்டாலினும், சேகர்பாபுவும் வேறு எதுவும் பண்ணவில்லை,
எப்படியாவது கோவிலை அழித்துவிட வேண்டும், கோவிலில் இருக்கிறதெல்லாம் எடுத்துவிட வேண்டும் என்று கோணி சாக்கை போட்டுக்கொண்டு கஜினி முகமது மாரியா போனாங்க, அதையும் நீதிமன்றம் சட்ட விரோதம் என்று நிறுத்தி இருக்கு.ஆனால் இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை, அதனால் ஆர்எஸ்எஸ் சேவாபாரதி மூலமாக…. பிஜேபி சென்ரலைஸ் கிச்சன் மூலமாக நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு செய்துகொண்டிருக்கிறோம்.