பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.
உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது.
அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை அந்நாட்டில் கொரோனாவால் சுமார் 3,68,249 நபர்கள் பலியாகியுள்ளனர். இதில் முக்கியமாக பிறந்த பிஞ்சு குழந்தைகள் பலியாவது கொடுமையாகவுள்ளது.
இதனால் பிரேசில் சுகாதாரத்துறை, பெண்களுக்கான முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளது. அதாவது கொரோனா தீவிரம் குறையும்வரை கர்ப்பமடைவதை தள்ளி வைக்குமாறு பிரேசில் அரசு கேட்டுள்ளது. அதாவது கொரோனா பாதித்த நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்களும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் சமயத்தில் அவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. கடந்த வருடத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சமயத்தில் தான் பெண்களுக்கு கொரோனா பாதித்தது. ஆனால் தற்போது கருவுற்ற சில தினங்களிலேயே உருமாற்றமடைந்த கொரோனாவால் கற்பிணிகள் அதிகமாக பாதிப்படைகின்றனர் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும் பிரேசில் அரசு, கர்ப்பமடைய முயற்சித்து வரும் 40 வயதிற்க்கும் அதிகமான பெண்களுக்கு இந்த அறிவுரை பொருந்தாது. எனினும் இளம்பெண்கள் இந்த அறிவுரையை ஏற்குமாறு கூறியுள்ளது.