சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் டீரா காமத் .இந்த 5 மாத குட்டி தேவதைக்கு இப்படி ஒரு நோயா என்று பலரும் வேதனைப்பட்ட நிலையில் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டது.மும்பையை சேர்ந்த டிராவின் தாய் பிரியங்கா தன் குழந்தை பிறக்கும்போது நன்றாக தான் இருந்தால், இயல்பாக தான் பிறந்தாள், எல்லா குழந்தைகளையும் போல் அழுதாள், சிரித்தாள் ஆனால் அவளுக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு ‘ஸ்பைனல் மஸ்குலர் டிராபி ‘எனப்படும் 6000 பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் அந்த தீவிர நோய் அவளுக்கு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் டிரா பிறந்து 5 மாதங்களே ஆவதால் அவளின் நரம்பு மண்டலம் பெரிதாக பாதிக்கவில்லை எனவும் தசைகள் சற்று சீராக இயங்குகிறது என்றும் கூறியுள்ளார். அனால் இந்த நோய்க்கான தடுப்பூசி விலைக்கான 16 கோடி ரூபாய் எங்களைப் போன்ற நடுத்தர மக்கள் கற்பனை கூட செய்யமுடியாத அளவுக்கு தடுப்பூசியின் விலை உச்சத்தில் உள்ளது என்று வேதனை அடைந்தார்.
டிராவின் பெற்றோர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சியடைந்தார்கள். இருப்பினும் டிராவின் பெற்றோர்கள் மகளை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் .அதனால் சமூக வலைத்தளங்களில் Teera -Fights -SMA என்ற ஹேஷ்டேக்யுடன் மக்களின் உதவியை நாடினார்கள். டீராவுக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து இதுவரை 12 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாகவும் மருத்துவ செலவிற்கு தேவையான 16 கோடியில் 6 கோடி ரூபாய் மருந்துக்கான ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரியாக செலுத்த வேண்டும் என்பது கூறப்படுகிறது .
தடுப்பூசி வரி சலுகை குறித்து சமூக வலைத்தளத்தில் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்கள் டிராவின் பெற்றோர்கள். இந்தப் பதிவு குறித்து பாஜ மூத்த தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அறிந்த பிரதமர் மோடி அந்த குழந்தைக்கு உதவ நாடி 6 கோடி ரூபாய் வரியை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்