Categories
தேசிய செய்திகள்

பிஞ்சு குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தந்தை….. அதிர வைக்கும் காரணம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹோட்டல் தொழிலாளியான பசப்பா (35). இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இருதய நோயால் அவதிப்படும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என அதிகமாக இவர் கடன் வாங்கியுள்ளார்.

அதனால் அந்த கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை வேறொருவரிடம் விற்க முடிவு செய்து சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி நாகவேணியிடம் இது கொடுத்து அவர் பேசியுள்ளார். ஆனால் அதற்கு அவரின் மனைவி மறுப்பு தெரிவித்து குழந்தையை கொடுக்க மாட்டேன் என கூறி அடம்பிடித்தார். அதனால் கோபப்பட்ட பசப்பா தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி தனது மனைவியை கொடுமை செய்துள்ளார்.

அதனால் தனது மூத்த மகனை நினைத்துப் பார்த்து நாகவேணி மனமே இல்லாமல் குழந்தையை விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கலிபுரா பகுதியில் இருக்கும் ஒரு தம்பதியினருக்கு குழந்தையை விற்று உள்ளனர். குழந்தையை விற்பதற்கு முன்பு வெற்று பத்திரத்தில் கையெழுத்தும் இவர்கள் போட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பசப்பா மற்றும் நாகவேணி தம்பதியினரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில் நடந்த அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்ததை தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் குழந்தையை பெற்றுச் சென்றவர்களை தேடி வருகிறார்கள்.மனைவியின் மருத்துவ செலவிற்காக பிறந்து 25 நாட்கள் ஆன குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சந்தை விற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |