Categories
பல்சுவை

பிடிஎஸ் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?….. அப்ப இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தென்கொரியாவில் 2010-ல் ஏழுபேர் இணைந்து தொடங்கிய இசைக்குழு (BangTan Sonyeondan) பேங்க்டன் பாய்ஸ்; இதன் சுருக்கமே பிடிஎஸ் எனப்படுகிறது. ஆரெம், ஜின், சுகா, ஜேஹோப், ஜிமின், வி, ஜுன்கூக் என்று மொத்தம் ஏழுபேர்கொண்ட கே-பாப் எனப்படும் இசைக்குழுதான் அது. அவர்களின் முழுப்பெயர்கள்தான் நம் வாயில் நுழையவில்லையே தவிர அவர்களது பாடல்கள் அனைவரின் காதுக்குள்ளும் நுழையத்தான் செய்கின்றன. 2013-ல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஆல்பங்கள் வெளியிடத் தொடங்கினார்கள்.

இவர்கள் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டை கொடுத்தது. இவர்களின் பாடல், இசை, நடனம் என்ற எல்லாவற்றையும் இந்த ஏழு பேர் தான் செய்து கொள்வார்கள். இவர்களுக்கு என தனி ஆர்மி உள்ளது. தமிழை தாண்டி பல இசைகளையும் விரும்பும் மக்களில் பிடிஎஸ்-யை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. இப்படி பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆக இருக்கும் பிடிஎஸ் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது பற்றி தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆய்வுப்படி பிடிஎஸ் 2021-22 ஆண்டுகளில் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 185 மில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள். இதில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் தனித்தனி சொத்து மதிப்பு என்னவென்றால் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒன்றாகவே உள்ளது. அதாவது ஜுன்கூக் 24 மில்லியன் டாலர், ஜிம்மின் 22 மில்லியன் டாலர், சுகா 21 மில்லியன் டாலர், ஆரம் 26 மில்லியன் டாலர், வி 22 மில்லியன் டாலர், ஜேஹோப் 26 மில்லியன் டாலர், ஜின் 20 பில்லியன் டாலர் உள்ளது. இதில் இவர்கள் செய்யும் ஷோக்களுக்கு மட்டுமல்லாமல், யூடியூப் வீடியோ, கான்செப்ட், விளம்பரம் என்று ஒரு வருடத்திற்கு 1.5 மில்லியன் டாலர் முதல் 2.8 மில்லியன் டாலர் வரை வாங்குகிறார்கள். பிடிஎஸ்-லேயே மிகவும் வசதியான நபர் யார் என்றால் ஜேஹோப் தான். 2018 ஆம் ஆண்டு இவர்களின் ஆண்டு வருமானம் 133 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது 185 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பிடிஎஸ்- இல் இருந்து மட்டும் இவர்களுக்கு வருடத்திற்கு சம்பளமாக 8 மில்லியன் டாலர் வருகிறது.

 

Categories

Tech |