ரேசன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பின் பேட்டியளித்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேசன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர். ரேசன் அரிசி சாப்பிடாதவர்கள், அதை வாங்கி அரசின் நல்ல திட்டத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.