Categories
அரசியல்

பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி… பாஜக மேலிடம் டென்ஷன்… பெரும் பரபரப்பு…!!!!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே அதிமுக இடைக்கால பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லிக்கு சென்று இருக்கின்றார். இருப்பினும் இந்த முறை டெல்லி பயணம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு இது நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த சூழலில் இன்று டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா  அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார். அப்போது சுமார் அரை மணி நேரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் அதிமுக பாஜக கூட்டணி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை என கூறியுள்ளார். இதற்கிடையே நேற்றிரவு டெல்லியில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமியை பாஜக மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து பேசியதாகவும் அப்போது ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படும்படி அவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்கள் சிதறக்கூடாது என்பதற்காகவோ பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்றும் படி எடப்பாடி பழனிசாமி இடம் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. மேலும் பொறுமையாக கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இன்று அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பற்றி மதிய உள்துறை அமைச்சர் அமைச்சவுடன் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் தனது முடிவை அவர் உறுதிப்பட கூறிவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட ஓ பன்னீர்செல்வம் குறித்த கேள்வியை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கதாகும். ஒருங்கிணைந்த அதிமுகவையே டெல்லி பாஜக மேல் இட தலைவர்கள் விரும்பும் நிலையில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |