அண்மையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 34 சதவீதம் ஆக உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி பலனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பெற்று பயனடையவுள்ளனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணியை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது எனவும் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அடிப்படையில் பிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு ஊழியர்கள், இது குறித்த சில நல்ல செய்திகளை விரைவில் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது பிட்மென்ட் காரணியை உயர்த்த அரசு ஒப்புதல் வழங்கினால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும். அதன்படி பிட்மென்ட் காரணி 2.57 மடங்கிலிருந்து 3.68 ஆக அதிகரிக்கப்பட்டால், சம்பளம் ரூபாய் 95,680 (26000X3.68 = 95,680) வரை உயரக்கூடும்.
இப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து 2.57 பிட்மென்ட் காரணியின் அடிப்படையில் ரூபாய் 46,260 (18,000 X 2.57 = 46,260) வரை சம்பளம் பெறலாம். அதிலும் குறிப்பாக 3.68 மடங்கு பிட்மென்ட் காரணி உயர்வால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூபாய் 18000-ல் இருந்து ரூபாய் 26000 ஆக அதிகரிக்கும். அத்துடன் அகவிலைப்படி, வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பிற அனைத்து கொடுப்பனவுகளும் ரூபாய் 26000 என்ற அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்படும். குறிப்பாக பிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும்.