செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் வந்து ஆளுநரை சந்தித்து இருக்கிறார் நீட் தேர்வை பற்றி இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
நீட் தேர்வு தொடர்பாக சந்தித்தார் என்று யார் சொன்னது ? நீட்டை தான் அவர்கள் நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து, அப்படி கொண்டு வந்துட்டீங்க. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி நாங்கள் வந்தால் நீட்டை எப்படி நீக்குவது என்று எங்களுக்கு தெரியும் என்று சொன்னீர்கள் ? இந்திய மருத்துவ குழுமம் என்னை அங்கீகரிக்க வேண்டியதில்லை என்று நாம் தீர்மானம் போட்டு கொடுத்து, போ அப்படி என்று சொல்லணும் அப்பதான் சரியா வரும், இல்லன்னா அவங்க சொல்ற எல்லாமே கேட்டு இருக்கனும்.
அவங்கள பொருத்தவரைக்கும் என்னவென்றால் நீட் தேர்வு என்பது காங்கிரஸ் – திமுக கொண்டுவந்தது என பாரதிய ஜனதாவை பொருத்தவரையில் அவர்கள் அப்படி தான் பார்ப்பாங்க, அது ஜிஎஸ்டி ஆக இருக்கட்டும், என்.ஆர்.சியாக இருக்கட்டும், என்.ஐ.ஆக இருக்கட்டும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஆக இருக்கட்டும் எல்லாமே அவர்கள் கொண்டு வந்தது தானே, நீங்க பெத்து குழந்தைக்கு பெயர் வைத்தீர்கள் நாங்க வளர்கிறோம் என சொல்லுறாங்க, அவ்வளவு தான் நடக்குது. அதனால் நீட்தேர்வு நீக்குவது என்றால் எப்போ நீக்கிருக்க வேண்டும் ?
இந்த ஆட்சியிலே வந்த ஆறு மாதத்திலேயே ஆறு குழந்தைகள் இருந்துவிட்டார்கள். அடிப்படையே தப்பானது… நீங்க வந்து ஒரு தேர்வின் மூலம் ஒரு தகுதியை வளர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இங்கே நுழைவு தேர்வு வேற, தகுதி தேர்வு வேற. அப்ப 12ஆம் வகுப்புல 1,196 வாங்கினாலும் தகுதியில்லாமல் போகிறது, 800, 760 வாங்கி பார்டரில் பாஸ் ஆகி வந்தாகூட நீட்ல தேர்ச்சி பெற்றால் தகுதியான மாணவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய கொடும்போக்கு என்று பாருங்கள், வட மாநிலங்களிலும் நீங்கள் பார்க்குறீர்கள்…. பரிட்சையில் எழுதுபவரை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. பிறகு என்ன செய்கிறீர்கள் என்றால் அந்த மேற்பார்வையாளர் அவர்களே வந்து பிட் அடிக்க கொடுக்கிறது இருக்கிறது, அப்புறம் எப்படி அவனுக்கு அவன் தாய் மொழியே தெரிய மாட்டேங்குது. ஹிந்தியே தெரிய மாட்டேங்குது. இப்ப தேர்ச்சி பெற்றவர்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் எந்த கேள்விக்கும் பதில் தெரிய மாட்டேங்குது.
இங்கே ஹரியானாவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் வாங்கி தபால் துறைக்கு வேலைக்கு வந்தது தெரியுமா ? உங்களுக்கு, தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழர் தோற்றுப் போகிறார்கள், ஹரியானாவை சேர்ந்த தமிழில் வென்று விட்டான் என்று சொல்லி வேலைக்கு ஆள் எடுத்தார்கள். இதெல்லாம் வந்து…. இந்த கொடுமையெல்லாம் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும், அதற்கு எல்லாரும் சேர்ந்து தான் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.