போடி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போடி திருமலாபுரத்தில் ஈ. வே. ரா. பெரியார் தெருவில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகனான விஜய் பிரகாஷ் (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதற்கான தேர்வினை எழுதும்போது ஆசிரியர் அவனை “பிட்”அடுத்ததாக கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த விஜய் பிரகாஷ் விஷம் குடித்து சிறிது நேரத்திலேயே மயங்கினான். உடனே அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவனை சிகிச்சைக்காக போடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அச்சிகிச்சை பயன் தராத நிலையில் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அவனை கொண்டு சேர்த்தனர். அதன் பின்பும் விஜய் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த போடி நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடந்தது என்ன என்பதை விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே விசாரணைக்கு பின்பே நடந்தது என்ன என்பதை கூறமுடியும் என்று போடி நகர் போலீசார் கூறியுள்ளனர்.