Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… பிணமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடல்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேலமரக்காட்டில் பிறந்த குழந்தையின் உடலை பிணமாக காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரும்பிரான்கோட்டையில் கருவேலமரக் காடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அந்த காடுகள் வழியாக சென்ற விவசாயிகள் அப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய் கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட இடம் சுடுகாடு இல்லாததால் குழந்தை நோயால் பாதிக்கப்பட்டதால் இங்கு புதைத்தார்களா என்ற விவரம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |