Categories
உலக செய்திகள்

பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட வீரர்கள்…. பரிமாறிக்கொள்ள நாங்கள் தயார்…. ரஷ்ய மனித உரிமை ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நான்காவது வாரமாக  நீடித்து வருகிறது.  இந்நிலையில் இருநாடுகளும் தங்களுடைய எதிரி நாட்டின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.  இதற்கிடையில் உக்ரைன் ராணுவத்தினரால் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட உக்ரைன் ராணுவ வீரர்களின் நிலை குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாமல் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில், சர்வதேச செஞ்சுலுவை சங்கத்தில் இருந்து பெறப்பட்ட 500 உக்ரைன் நாட்டு போர் கைதிகள் பற்றிய விவரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது.  மேலும் இந்த போரில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள மாஸ்கோ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.  இது குறித்து ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா கூறியதாவது “உக்ரைனில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு மாற்றாக உக்ரைனின் வீரர்களை பரிமாறி கொள்ள ரஷ்யா தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |