பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு என்னென்ன உணவுகள் ஆபத்து என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பித்தப்பை கற்கள் ஆரம்பத்தில் எந்தவித அறிகளும், பாதிப்புகளையும் வெளிப்படுத்தாமல் உருவாகும். ஆனால் நாள்பட்ட பின்னர் மோசமான பாதிப்புகளையும் தீவிர வலியினையும் கொடுக்கும்.
பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு வலது நெஞ்சு வலி, தலை வலி, பின் முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாகும். வயிற்றில் மேல் பகுதியில் வலது புறத்தில் வலி கடுமையாக ஏற்படும். அதிகப்படியான உடல் எடை குறைவு. உங்களுக்கு பித்தப்பையில் கல் இருப்பது உறுதியானால், நீங்கள் கட்டாயம் உங்களது உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜியில் வைத்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை கட்டாயம் உட்கொள்ளக்கூடாது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகள், பரோட்டா, ஃபிரைட் ரைஸ், மக்ரோனி, நூடுல்ஸ் பீசா, பர்க்கர் போன்ற மைதா மாவில் செய்யும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து கொள்ளுதல் வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதனைக் கடைப்பிடிக்கும் போது பித்தப்பை கற்கள் கரைய உதவியாக இருக்கும்.