தபால் ஓட்டுலேயே திமுக பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது என அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது. தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை தாருங்கள்.
திருச்சியில் போலீசார் 3 பேருக்கு திமுகவினர் தபால் ஓட்டு போடுவதற்கு லஞ்சம் கொடுத்துள்ளார்கள். திமுகவினர் தபால் ஓட்டு நிலையில் தங்களது பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். ஊடகங்கள் திமுக வரும், அதிமுக வரும் என மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் நிதானம் இல்லாமல் காமெடியனாக மாறிவிட்டார். நீங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள். நீங்கள் தீய சக்தி திமுகவிற்கும் அதிமுகவிற்கும் முடிவு கட்ட வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அரசு நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டுவர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களியுங்கள். திண்டுக்கல்லில் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை கொண்டு வரப்படவில்லை திண்டுக்கல் மக்களின் அடிப்படை பிரச்சனையான தோல் தொழில் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.