Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பித்த நிவர்த்திக்கு…முக்கிய வேர்…விளாமிச்சை வேர்…!!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பித்த நோயால் பாதிப்பது உண்டு. அதனை சரி செய்ய ஒரு சில வழிமுறைகள்: 

“பித்தம் தலைக்கு ஏறிடுச்சா” என்று சமயத்தில கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா வேலையே ஓடாது. ஏடா கூடமா எதையாச்சும் செய்வோம். இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு.

சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் முழுமையா குணமாகும்.

100 கிராம் திராட்சை உலர்ந்ததை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர பித்தம், வாந்தி, வாய்கசப்பு தீரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்ச வேர், கிராம்பு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து அந்தத் தூளை தினமும் 2 வேளை 5 கிராம் வீதம், 3 அல்லது 5 தினம் சாப்பிட்டு வர தலைசுற்றல் மற்றும் பித்தம் குணமாகும்.

திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூளை விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.

Categories

Tech |