Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்தொடர்ந்த மர்மநபர்கள்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியரின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சி.எச்.பி. காலனியில் வசித்து வரும் சமீம் என்பவர் அணிமூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல சமீம் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் திடீரென சமீம் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சமீம் உடனடியாக திருச்செங்கோடு ரூரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |