சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில் திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிரதமர் மோடியின் பயணம் இரத்து குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , மாண்புமிகு பாரதப் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 5.1.2022 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு @narendramodi ஜி அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.
இந்த பாதுகாப்பு குளறுபடி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.(3/4)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 6, 2022
இந்த பாதுகாப்பு குளறுபடி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாரதப் பிரதமருக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடியை கடுமையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் வேறெங்கும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமருக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடியை கடுமையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் வேறெங்கும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (4/4)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 6, 2022