டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவில் வசித்து வருபவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 48) கூலித்தொழிலாளி. இவரது நண்பரான இளையராஜா (32), பிரபாகரன் (28) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 25 ஆம் தேதியன்று பக்கத்திலுள்ள ஊருக்கு டிராக்டரில் வைக்கோல் ஏற்றி சென்றனர். அப்போது பின்னால் வந்த இன்னொரு டிராக்டர் மோதியதால் இளையராஜா என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த செந்தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் இளையராஜாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அங்கு செந்தமிழ்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இளையராஜா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.