Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி நகர்ந்த பேருந்து…. விரைந்து செயல்பட்ட வாலிபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து ஒன்று பண்ணை காடு நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை அருகில் உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார்.

ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து மலைப்பாதையில் திடீரென பின்னோக்கி நகர்ந்தது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறி சத்தம் போட்டனர். இதற்கிடையே சில வாலிபர்கள் பேருந்தில் இருந்து கீழே குதித்து சாலையில் கிடந்த கற்களை எடுத்து பேருந்து சக்கரத்தில் வைத்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ஊர்களுக்கு நடந்து சென்றனர்.

Categories

Tech |