Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…. அலுவலர்களுக்கு சிறப்புபயிற்சி….அதிகாரிகளின் முயற்சி…!!

பொள்ளாச்சியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  போன்ற பதவிகளுக்கான தேர்தலாகும்.

இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதில் ஓய்வுபெற்ற ஆணையர் முருகேசன் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலரான செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவுக்கு தேவையான விண்ணப்பங்கள், ஓட்டு பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் வந்துள்ளதா? என்று உறுதி செய்ய வேண்டும். அதன்பின் வாக்குப்பதிவு நாளன்று முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஓட்டுப் பெட்டியை திறந்து காண்பித்து, அது காலியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க வேண்டும். வாக்குப்பதிவு செய்யும்போது எவ்வித தகராறும் வராமல் நடுநிலையுடன் செயல்படல் வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஏதேனும் தகராறு நடந்தால், அதனை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில் தங்களது கருத்தினை முன்வைத்துள்ளனர்.

Categories

Tech |