Categories
உலக செய்திகள்

பின்லாந்தில் பலத்த காற்றால்…. தரை தட்டிய கப்பல்…. பயணிகள் அதிர்ச்சி…!!

400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது.

இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி நின்றுள்ளது. இருப்பினும், கப்பலில் எந்த கசிவும் ஏற்படவில்லை.  இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.  இந்நிலையில் கப்பல் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |