ஐரோப்பிய கண்டத்திலுள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன் 30 % பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து போருக்குப் பிறகு 60 % மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டுமென்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்து உள்ளார். பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப்பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வெளியிடப்படஇருக்கிறது.
அதன்பசி விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா?.. வேண்டாமா?.. என்பதைப் பின்லாந்து எம்பிக்கள் முடிவு செய்யவுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் சன்னா மரின் கூறியதாவது “ஆழமான விவாதம் நடத்தப்பட்டு விரைவில் இதில் முடிவு எடுப்போம். இன்னும் ஓரிருவாரங்களில் இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். 150 வருடகால ரஷ்ய ஆட்சிக்குப் பின் 1917 ஆம் ஆண்டு பின்லாந்து சுதந்திரம் அடைந்தது.
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையில் நடந்த பனிப்போர் சமயத்திலும் பின்லாந்து நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது. அவற்றிற்கு பதில் பின்லாந்து மீது படையெடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தைச் சோவியத்ஒன்றியம் வழங்கியிருந்தது. எனினும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதனிடையில் பின்லாந்தில்200 எம்.பி.களில் 6 நபர்கள் மட்டும் நேட்டோவில் இணையக்கூடிய முடிவினை வெளிப்படையாகவே எதிர்கின்றனர். அத்துடன் ஏரளமான எம்பிகள் பின்லாந்து நாட்டில் இணைய வேண்டும் என்றே தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.