Categories
மாநில செய்திகள்

“பின்லேடன் போல் இல்லாமல்” கண்டிப்பாக நீங்க அத செய்யணும்…. இல்லனா அரசியலுக்கு திருடர்கள் வந்துடுவாங்க…. கமல்ஹாசன் அட்வைஸ்….!!!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது.

வைரமுத்து, வாலி, எஸ்பிபி, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் அனைவரையும் என்னுடைய சகோதரர்களாகவும், குருவாகவும் கருதுகிறேன். பொதுவாக மாணவர்கள் பாட நூல்களை கற்பதோடு பிற நூல்களையும் படிக்க வேண்டும். இதில் குறிப்பாக மாணவர்கள் எட்வர்ட் எழுதிய லேட்டரல் திக்கிங் எனும் புத்தகத்தை படிக்கலாம்.

மாணவர்கள் அனைவரும் காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியை புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒவ்வொருவரும் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்துக்கு தரும் முதல் முத்தத்தை போன்றது. வாக்களிக்க தயங்குபவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசவே தகுதியற்றவர்கள்.

நாம் அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் வாக்களிக்காமல் இருந்தாலும் திருடர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்கள். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக பயிற்சி தேவை. பொறியியல் துறையை பின்லேடன் அழிவுக்காக பயன்படுத்தினார். அவரைப் போன்று இல்லாமல் பொறியியல் துறையை மாணவர்களாகிய அனைவரும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

Categories

Tech |