தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி சிலர் இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து 21-வது வார்டுக்கு உட்பட்ட பிரசாந்த் வீதியில் இருக்கும் கோழி கடையின் பின்புறமாக இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 5 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.