Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பின்வாசல் வழியாக தப்பி ஓடிய குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்யும் காட்டு யானை….. அச்சத்தில் ஆதிவாசி மக்கள்….!!!

காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் காட்டு யானை செம்மக்கொல்லை  கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை மாறன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் ஆதிவாசி மக்கள் இணைந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் நேற்று காலை நேரில் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டபோது உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதனை அடுத்து  யானைகள் பகலில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் யாரும் வெளியே நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |