சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்) ஒரு சிறந்த வழி ஆகும். இங்கு குறைந்த பணத்தில் முதலீடு செய்வது துவங்கி ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டம் முற்றிலும் பாதுகாப்பானதாகும். இந்நிலையில் அரசு சார்பாக பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் சென்ற நாட்களாக 7.10 சதவீதம் ஆக வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களில் அரசு பிபிஎப் மீதான வட்டி விகிதம் குறித்து பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்) கணக்கில் முதலீடு செய்வதற்கு ரூபாய் 50 என்ற மடங்குகளில் முதலீடுசெய்ய வேண்டும். இத்தொகை வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 (அல்லது) அதற்கு மேல் இருத்தல் வேண்டும். எனினும் பிபிஎஃப் கணக்கில் முழு நிதி ஆண்டிலும் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இது தவிர்த்து ஒரு மாதத்துக்கு ஒருமுறை மட்டும் இந்த பிபிஎப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய இயலும். அதேபோன்று உங்கள் பிபிஎப் கணக்கிலுள்ள நிலவைத்தொகைக்கு எதிராகவும் நீங்கள் கடன்பெறலாம்.
முன்பாக இதற்கான வட்டிவிகிதம் 2 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து 15 வருடங்கள் நீங்கள் முதலீடுசெய்து அதற்கு பின் முதலீடு செய்யவில்லை என்றாலும் உங்களின் பிபிஎப் கணக்கு ஆக்டிவ் ஆக இருக்கும். பிபிஎப் கணக்கை துவங்க பார்ம் 1-ஐ சமர்பிக்க வேண்டும். 15 வருடங்களுக்கு பிறகும் அக்கவுண்ட் செயல்பட ஃபார்ம் எச்க்கு பதிலாக ஃபார்ம் 4ல் விண்ணபிக்க வேண்டும். ஆகவே பிபிஎப் கணக்கிலும் கடன் கிடைக்கும். இதற்கென விண்ணப்பித்த நாளில் இருந்து 2 வருடங்களுக்கு முன்பு உங்கள் கணக்கில் இருப்பு இருக்கவேண்டும் என்பதுதான் விதி ஆகும். அத்துடன் அதில் 25 சதவீதம் மட்டுமே கடன் பெற முடியும்.