பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் இன்று காலை அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து பலரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் கோவை சூலூரிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்நிலையில் தற்போது தலைமை தளபதி உடலுக்கு
டெல்லி பாலம் விமான நிலையத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 11 பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.. மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இணை அமைச்சர் அஜய் பட், ராணுவத் தளபதி நரவானே உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்..
உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
#WATCH PM Narendra Modi leads the nation in paying tribute to CDS General Bipin Rawat, his wife Madhulika Rawat and other 11 Armed Forces personnel who lost their lives in the military chopper crash yesterday pic.twitter.com/6FvYSyJ1g6
— ANI (@ANI) December 9, 2021