ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் இருந்த நிலையில் சற்று முன் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பிபின் ராவதின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, பிபின் ராவத் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நாட்டிற்காக ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.