பிப்ரவரி மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், உரம், மின்சாரம், உருக்கு ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் இந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது 5.8% அதிகமாகும். இந்தத் துறையின் உற்பத்தி 2021-2022 நிதி ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.