Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி-1 ஆம் தேதி வேலைநிறுத்தம்…. மின் ஊழியர்கள் அறிவிப்பு…!!!!

மத்திய அரசு புதிதாக கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மின்சாரத்திற்கு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த சட்டத்திருத்தமானது தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக இருக்கிறது. புதிய மசோதா, தனியார் நிறுவனங்கள் எந்த முதலீடு செய்யாமல் பொதுத்துறை நிறுவனத்தின் மின்கட்டமைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து மின் ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி  டிசம்பர் 15ம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதனால் பிப்ரவரி 1ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |