தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம்போல் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உள்ள ஒரே சவால் முழுமையாக பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பது தான். இதை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். மேலும் பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார்.