Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல் பிளாஸ்டிக் பெருட்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் சமீபகாலமாக”பிளாஸ்டிக் பயன்பாடுகள்”அதிகரித்து” வருவதால் நீரோடைகள், புல்வெளிகள், வனப்பகுதிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இதைத் தவிர்த்து கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்திவிட்டு அவற்றை கொடைக்கானல் பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுலா இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் கிடக்கிறது. இவற்றை வன விலங்குகள் உண்பதாலும், நகர்ப் பகுதிகளிலுள்ள கால்நடைகள் உண்பதாலும் அவை இறந்து நேரிடுகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது கொடைக்கானல் நகரம் மாசுபடிந்து வருகிறது. எனவே கொடைக்கானல் இயற்கையை பாதுகாக்கும் வகையில் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வியாபாரிகள், வர்த்தகர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும், ஒரு லிட்டர் முதல் 4 லிட்டர் வரையுள்ள தண்ணீர் கேன்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் 5−லிட்டருக்கு மேல் தண்ணீர் கேன்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திக் கொடைக்கானல் நகராட்சி அலுவலக வளாகத்தில் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் வர்த்தகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்”நடைபெற்றது.

கூட்டத்தில் ஒரு மாதம் காலகெடு கொடுக்கப்பட்டு அதற்குள் கொடைக்கானல் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், வியாபாரிகள் வைத்துள்ள அனைத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் அதற்கு மேல் வியாபாரிகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி்கள் கூட்டத்தில் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள்,வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |