பிப்ரவரி-1 ஆம் தேதி முதல் மற்ற துறையினறை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒருசில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன் களப்பணியாளர்கள் 900 பேருக்கு இதுவரை ஒரு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் முன்களப்பணியாளர்களிடையே தயக்கம் இருந்தது. தற்போது இந்த தயக்கம் நீங்கி உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மருத்துவ துறை தவிர மற்ற துறை சார்ந்தவர்களுக்கு, அதாவது காவல் துறை, வருவாய் துறை, ஊடகத் துறை போன்றவற்றை சேர்ந்த முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கபடும் என்று தெரிவித்துள்ளார்.