Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 10 முதல் பள்ளிகள் திறப்பு …மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் அரியானாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது தொற்று பரவல் முழுவதுமாக குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |