பிப்ரவரி 15 முதல் முழுவதும் சுங்கச்சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடிக்கு சுங்கச்சாவடி வேறுபடும். இந்நிலையில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மொபைல் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்காக 27 வங்கிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.