தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றோர் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.