இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் 45 ஆண்டுகால சிபிஎஸ்இ மாணவர்களின் கல்வி ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.