Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 30 ஆம் தேதி இறந்ததாக வாரிசு சான்றிதழ்… குடும்பத்தின் அவல நிலை…!!!

ராஜபாளையத்தில் வாரிசுச் சான்றிதழில் பிப்ரவரி 30 ஆம் தேதி இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு நம் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்கும் அந்த சான்றிதழ்களில் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் தவறுகள் நடக்கின்றன. அதன்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

ராஜபாளையத்தில் உதய குமார் என்பவரின் வாரிசுச் சான்றிதழில் அவரது தந்தை பிப்ரவரி 20ஆம் தேதி இறந்து போனதாக குறிப்பிட்டுள்ளதால் வங்கியில் கடன் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு அவரது தந்தைக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழை பார்த்தபோது அதிலும் பிப்ரவரி 30 ஆம் தேதி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |