இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முதலமைச்சருடன் கலந்து பேசி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அறிவிக்கும். அதேசமயம் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் செயலருடன் ஆலோசித்து தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் ? என்பது பற்றி அறிவிக்கப்படும் என நமச்சிவாயம் கூறியுள்ளார்.